தமிழீழ தேசிய மாவீரர் நாள் சுவிஸ்லாந்து 2023 !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதன் அவருடைய வீரச்சாவடைந்த நாள் மாவீரர் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டு 1989. 11.27 அன்றிலிருந்து இதே நாள் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 34ம்  ஆண்டாக தாயகத்தில் சகல மாவீரர் துயிலும் இல்லங்களிலும். புலம்பெயர் தேசங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நாள் மண்டபத்தில் உணர்வு பூர்வமாக நடந்தேறியது. அந்த ஒழுங்கில் சுவிஸ் நாட்டில் Messe Süd, Messeplatz 10, 4058 Basel,Switzerland இந்த முகவரியில் நடைபெற்றது .

முதலாவது மாவீரர் லெப் .சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் வடமராட்சி துயிலும் இல்லத்து மண்ணையும் (ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட) ஏனைய மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித மண்ணையும் மாவீரர்களின் பிள்ளைகள் எடுத்து வந்தனர்.


தொடர்ந்து

முன்னாள் போராளி நஷீர் அவர்களால் தமிழீழ தேசியக் கொடிஏற்றி வைக்கப்பட்டது .


முன்னாள் போராளியும், மாவீரர் சேரலாதனின் துணைவி அமலா அவர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.


அகவணக்கத்தை  தொடர்ந்து

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 2008 ம் ஆண்டின் மாவீரர் நாள் உரை ஒளிபரப்பட்டது . தொடர்ந்து

துயிலுமில்லப்பாடல் ஒளிபரப்பானது

முன்னாள் போராளியும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் ரகு சிறப்புரை ஆற்றினார் .


 நிகழ்வுகளை  திருமதி பிரபாகினி ,கவிதரன் , செல்வி ஜனனி  ஆகியோர் தொகுத்து வழங்கினார்.


இந்த ஒழுங்கில் நிகழ்வுகள் நடைபெற்றது

நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் சமயப்பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
















0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post