கொடுவாமடுவில் STF ஐ கதிகலங்கவைத்த ஈரோஸ்!

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டு அம்பாறை மாவட்டத்தில் பஸ் எரிப்பு வங்கிக் கொள்ளை கைக்குண்டு வீச்சு என்று சில சம்பவங்கள் தனிக் குழுக்களாலும் சில தனிமனிதர்களாலும் நடத்தப்பட்டாலும்

மட்டு அம்பாறை மண்ணில் நாகப்படை என்ற இயக்கம் மாலா இராமச்சந்திரனுக்கு கொடுத்த மரணதண்டனை சம்பவம் ஒன்றும் இருந்தாலும்

Eastern Group என்ற அமைப்பு மட்டக்களப்பு கச்சேரி அறையில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட வேட்டைத் துப்பாக்கிகளையும் (SHOT GUN),

மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்திலிருந்து exploder என்று அழைக்கப்படும்,  வெடிக்கவைக்கும் கருவியையும்,

அத்தோடு, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில்  விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கக் கூடிய பொருட்களையும் கைப்பற்றியதே முதலாவது பாரிய தாக்குதல் சம்பவமாகப் பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து 41 தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து  திட்டம் தீட்டி தப்பியோடிய நிகழ்வும்

அதன் பின்னர் புலிகளால் நிர்மலாவை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சிறை உடைப்பும் அதிரடியானவை என்றாலும்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் (central camb )எனும் இடத்தில் அமைந்துள்ள  காவல் நிலையத்தை

"தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்ற அமைப்பு வெற்றிகரமாக தாக்கி அங்கிருந்து பல ஆயுதங்களை கைப்பற்றிய நிகழ்வே முதலாவது காவல் நிலைய தாக்குதல் சம்பவமாக வரலாறு பதிவு செய்து இருக்கின்றது

இவைகளைப் போலவே கொடுவாமடு பகுதியில் ஈரோஸ் இயக்கம் STF  என்ற சிறப்பு அதிரடிப் படை மீது வெற்றிகரமாக நடத்திய கண்ணிவெடித் தாக்குதலே முதலாவது கரந்தடித் தாக்குலாகும்.

அதன் விபரம் பின் வருமாறு:

STF என்ற சிறப்பு அதிரடிப் படை பிரிவு என்பது  1983 ஆம் ஆண்டு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை காவல்துறையின் சிறப்புப் படையினரைக் கொண்டு

ராணுவத் தாக்குதல்களின் அனைத்து அம்சங்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு

இராணுவப் படையாக அல்லாமல் மிகவும் சிறப்பு வாய்ந்த பொலிஸ் பிரிவாக இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது

இந்த விசேட அதிரடிப்படையினர் முழுமையாக உருமறைப்புச் சீருடையில்

 கோல்ட் கொமாண்டோஎன்று அழைக்கப்பட்ட கோல்ட் ஆட்டோமேட்டிக் ரைபிள் (AR-15), யூசி மெஷின் கன், க்ளோக் பிஸ்டல் மற்றும் பிரவுனிங் ஹை-பவர் கைத்துப்பாக்கி அத்தோடு அல்டிமேக்ஸ் 100 எல்எம்ஜி, ஹெக்லர்&கோச் பிஎஸ்ஜி ஸ்னைப்பர் ரைபிள்ஸ்  சகிதம் பிரித்தானியாவின் தயாரிப்பான Land Rover Discovery இல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் வாகனேரி தொடக்கம் திருக்கோவில் வரையான இடங்களில் ஆறு  முகாம்கள் அமைத்து நிலை கொண்ட  இந்த விசேட அதிரப்படையினரது எந்த முகாம்களையும்

1983 ஆம் ஆண்டில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிவரை எந்த போராளிக் குழுக்களாலும் தாக்க முடியவில்லை என்பதே நிதர்சனமாகும்.

அத்தோடு இந்த  விசேட அதிரடிப்படையின் பலதிற்கு அதன் பொறுப்பதிகாரியாக இருந்த தர்மசிறி வீரக்கோன் மற்றும் விஜயதுங்க போன்றவர்களின் வழி நடத்தலும் ஒரு காரணம் எனலாம் 

இவ்வாறு விசேட அதிரடிப் படையினரின் முகாம்களை தாக்கி தகர்க்க முடியாவிட்டாலும்  நாள் தோறும் ரோந்து செல்லும் அந்த விசேட அதிரடிப் படையினர் மீது  தாக்குதல் நடத்தி அவர்களை அழிக்கும் முடிவினை எடுத்த ஈரோஸ் இயக்கப் போராளிகள் 

மிகத்துள்ளியமாக திட்டம் தீட்டி நன்றாக வேவு பார்த்து நன்கு பயிற்றப்பட்ட  பத்துக்கும் மேற்பட்ட போராளிகளை தயார்படுத்தி தாக்குதல் நடத்தும் இடமாக கொடுவாமடுவை தேர்ந்தெடுத்து அந்த தாக்குதலுக்கு 1985 ஆம் ஆண்டு  4 ஆம் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை நாள் குறித்தனர்.

பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம்  தலைமையில், கரண் ,கஜன், முருகன், சாண்டோ, மோகன், விக்கி, சின்னவன், சுரேஷ் ஆகிய போராளிகள் உட்பட மேலும் சில போராளிகள் கண்ணி வெடிகளை புதைத்து தாக்குதலுக்கு தயாராகி இருந்த நிலையில் .

அதிரடிப்படை அதிகாரி வீரதுங்கா தலைமையில் புல்லுமலை கோப்பாவெளிப் பகுதியில் தமது சுற்றி வளைப்பை மேற்கொண்டு விட்டுத் பொது மக்களுக்கு சொந்தமான ஒரு ROSA Mini Bus, Nissan Caravan என இரண்டு வாகன சகிதம் திரும்பி வந்து கொண்டிருந்த விசேட அதிரடிப் படை மீது, புதைத்து வைத்து கண்ணிகளை வெடிக்க வைத்து துப்பாக்கி தக்குதலை மேற்க் கொண்டனர்

பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம் தலைமையில் நடை பெற்ற இந்த தாக்குதலில் அதிகாரி வீரதுங்கா உட்பட  பெருந்தொகையான படையினர் கொல்லப்பட்டு, Colt Comando  Rifle, AK47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் ஈரோஸ் அமைப்பினரால் கைப்பற்றப்பட்டன.

அத்தோடு கோப்பாவெளிச்  சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினரால் கைதாகி அவர்களின் வாகனத்தில் இருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களான தவராசா மற்றும் ராஜன் ஆகியோரும்   இத்தாக்குதலின் போது  கொல்லப்பட்டனர் என்பதோடு 

இதனைத் தொடர்ந்து  புலிபாய்ந்தகல் என்னும் இடத்துக்கு அருகாமையில்  வடமுனை வீதியில்  நடத்தப்பட்ட  மற்றுமொரு கண்ணி வெடித் தாகுதலிலும்

துப்பாகிச் சமரிலும் மேலும் பல அதிரடிப்படையினர் ஈரோஸ் இயக்கதினரால் கொல்லப்பட்டனர்.

பிற்காலங்களில் ஈரோஸை போன்று இவ்வாறான வெற்றிகரமான தாக்குதல்கள் பலவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியது என்பதே  வரலாறாகும் என்றாலும்

PLOTE  இயக்கம் மன்னம்பிட்டியில் ராணுவ காவலரன் மீதான தாக்குதலையும்

EPRLF அமைப்பு  புல்லுமலை உட்பட வேறு சில இடங்களில் தூரத்தில் இருந்து மோட்டார் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு இருந்தாலும்

மட்டு அம்பாறை மாவட்டங்களில்

TELO அமைப்பு எந்த தாக்குதல்களையும் நிகழ்த்தவில்லை என்பதே நிதர்சனமாகும்

இவ் அமைப்புக்கள் இவ்வாறு குறிப்பிட்டுக் கூறும்படியான எந்த ஒரு ராணுவத் தாக்குதல்களையும் மட்டு அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அல்லாது திருகோணமலை மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு இடத்திலும் நடத்தவில்லை என்பதையும் உறுதியாக பதிவு செய்து

ஈரோஸ் இயக்கத்தின் இந்த வெற்றிகரமான தாக்குதலுக்கு தலைமைதாங்கிய போராளி பொன்னன் என்ற பாக்கியராசா பொன்னம்பலம் அவர்கள்

1987 ஆம் ஆண்டு  6ஆம் மாதம் 22ஆம் திகதி மருத்துவமனையில் தங்கி இருந்த வேளையில் விசேட அதிரடிப்படையின் தாக்குதலில் வீரமரணமானார் என்பதோடு

அவரது சகோதரர் விமலநாதன் என்ற பாக்கியராசா ரவியும் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருக்கும் போது களத்தில் சமராடி வீரமரணமானார் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன்

அத்தோடு 

இந்த தக்குதல் மட்டும் அல்லாது மட்டு மாவட்டதின் புனானைப் பகுதியிலும்  ஶ்ரீலங்கா ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் செய்து ஆயுதங்களை கைப்பற்றிய ஈரோஸ் இயக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் மற்றைய மக்கள் விரோத இயக்கங்கள் யாவும்  தடை செய்யப்பட்டபோதும் , அது தமிழீழ விடுதலைப் புலிகளால் எந்த விதத் தடையும் இன்றி தொடர்ந்தும் இயங்கி வந்தது.

ஆனால்

முதலாம் கட்ட ஈழப்போரின் பின்னர்  இரண்டாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில், ஈரோஸ் இயக்கம் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  விடுதலைப் புலிகளின் அன்றைய மட்டு அம்பறை சிறப்பு தளபதியான  கருணா ஒரு பொதுக் கூட்டம் ஒன்றில் பதிவு செய்தார் என்றாலும்,

புலிகளின்  அறிவுறுத்தலின் படி ஆகஸ்ட் மாதம் முதாலாம் திகதி 1990 ஆம் ஆண்டு அதன் தலைவர் வே.பாலகுமார் அவர்களால் ஈரோஸ் இயக்கம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொள்ளாது  ஈரோஸ் அமைப்பின் ராணுவப் பொறுப்பாளரான சங்கர் ராஜீ அவர்களின் தலைமையில்

ஈரோஸ் அமைப்பில் சிலர் இயங்க முற்பட்டாலும் அந்த எண்ணம் ஈடேறவில்ல.

மாறாக ஈரேஸ் அமைப்பின் ஒரு தலைவர் வே. பால குமார் மற்றும் முக்கிய உறுப்பினரான பரா எனப்படும் பரராஜசிங்கம் மற்றும் சில ஈரோஸ் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தமிழீழ விடுதலை புலிப் போராளிகளானார்கள்.

இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பில் அந்த அமைப்பு கலைக்கப்படும் வரை இருந்து  வீரமரணம் அடைந்த ஈரோஸ் போராளிகள் அனைவருக்கும் மாவீரர் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இடம் வழங்கினார்கள் அந்த வகையில்

விடுதலைப் புலிகளினால் பிரேரிக்கப்பட்ட ஈரோஸ் மாவீரர்கள் பட்டியலில்

திருகோணமலை மாவட்டதை சேர்ந்த 91 பேரும்

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 44 பேரும்

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 43 பேரும்

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும்

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும்

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும்

யாழ்பாண மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும்

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 25 பேரும்

மேலும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும்

அத்தோடு  விபரம் அறிவிக்கப்படாத 9 பேருமாக

மொத்தம் 266 மாவீரர்கள்  என அறிவித்து விடுதலைப் புலிகளால் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளால்

ஈரோஸ் இயக்க முன்னாள் தலைவர் பாலகுமார் அவர்கள் புலிகளின் மத்திய குழு உறுப்பினராகவும்

பரா எனப்படும் பரராஜசிங்கம் அவர்கள் தமிழீழ நீதித்துறைப் பொறுப்பாளராகவும் உள்வாங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் என்பதோடு

விடுதலை புலிகளில் இணைந்து கொண்ட  முன்னாள் ஈரோஸ் போராளிகள் பலருக்கு தரநிலைகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சுவாமி சங்கரானந்தா

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post