தமிழரசுக் கூடாரத்தினுள் ஓட்டகங்களின் ஆட்டம்!
அசிங்க
அரசியல்..!
தமிழ்
பொதுவேட்பாளரான எனக்கு எதிராக தற்போது தமிழரசுகட்சியில் சஜீத்பிரமதாசாவை ஆதரிக்கும் ஒரு கும்பல் தயாரித்த துண்டுப்பிரசுரம் அவர்களால்
இன்று இரவு வெளியிட இருந்ததை
அவர்களின் ஆதரவாளர் ஒருவர் என்கு அனுப்பி இருந்தார்..!
இப்படி நடக்கும் என்பதை நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
இது என்னால் வெளியிடவில்லை என்பதை தெரிவிக்கிறேன்.
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை மக்கள் உணரவேண்டும்.
பா.அரியநேத்திரன்
20/09/2024, இரவு 10, மணி
***
2009 குப் பிறகு வில்லங்கமான நபர்கள் தமிழ் அரசியலுக்குள்
புகுந்ததால் இறுதி நேரத்தில்லு முல்லுகள் நடை பெறுகின்றன. பாராளுமன்றத்
தேர்தல் சமயம் பரப்புரைக் காலம் முடியும் தருவாயில் மயிலந்தனைப் படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சார்பாக நீதி மன்றில் ஆஜரானார் கஜேந்திரகுமார் எனப்பச்சைப் பொய் ஒன்றை சுமந்திரன் கூறினார்.
வடமாகாண
சபை தேர்தலின் போது ஆனந்தி சசிதரன் ஆளுங் கட்சியுடன் இணைந்து விட்டார் என போலியான உதயன் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டது. உண்மையைத் தெளிவுபடுத்த
பலமணிநேரம் ஆனதால்
ஆனந்தியின் வாக்கு எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. முதலமைச்சர்க்கு எழுதிய கடிதத்தில் ஆனந்தி ஒரு இலட்சத்துக்கு
மேற்பட்ட வாக்குகள் பெற்று உங்களைவிட கூடுதலான நிலை வரக்கூடிய சூழ்நிலை இருந்த போது நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார் அன்றைய தமிழரசுக் கட்சிச் செயலர் கி.துரைராசசிங்கம்.
தற்போது அரியநேத்திரனின் பெயரில் போலியான துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் சூத்திரதாரிகளை இனங்காண்பது பெரிய விடயம் அல்ல.
இந்தப்
போலியான துண்டுப் பிரசுரமும் அதற்கு அரியநேத்திரன் வெளியிட்ட மறுப்பும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மக்களே இவற்றைக் கண்டு குழப்பமடைய வேண்டாம்.
Post a Comment