தமிழ்_தேசிய அரசியல் பரப்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளில் இருந்து எவ்வாறு தெளிவடைவது..
தமிழ்
தேசிய அரசியலின் இருப்பு எந்த வகையில் முக்கியத்துவம்
வாய்ந்தது என்றால் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் தமிழ்
தேசிய அரசியல் தனது சுயத்தை இழக்காமல்
இருக்க வேண்டும் என்பதோடு ஒரு தொடர்ச்சியும் இன்றியமையாத
ஒன்றாகும்.
தற்போதைய
சூழலில் தற்காலிகமாக தமிழ் தேசிய அரசியல் வெளியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு
(TNA) இன் பிளவே மிகப் பிரதானமான காரணமாகும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இது தமிழ் தேசிய
இனத்தின் அரசியல் நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இன்று வளர்ந்து நிற்கின்றது. TNA இல்
ஏற்பட்ட பிளவுகள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பது சிலருக்கு விளங்கியிருக்க வாய்ப்புண்டு.
தமிழ் தேசிய அரசியலின் இருப்பும் , உயிர்ப்பும் தமிழ் தேசியத் #தந்தை_செல்வா அவர்களில் இருந்தே புதுப் கொள்கையுடன் பரிணமித்து வளர்ந்தது என்றால் எவரும் மறுக்க முடியாது. தமிழ் தேசிய இனத்திற்கு இலங்கை பாராளுமன்றத்தில் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்று வெளியில் வந்து வட்டுக் கோட்டை தீர்மானத்தை பிரகடனப்படுத்தி பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய அரசியல் உக்கிரமாக மேல்
நோக்கி நகர்ந்தது என்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த அரசியலின் தொடர்ச்சிதான்
அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியிலும் முன்நகர்த்தப்பட்டு 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்
வரையும் பயணித்தது மாத்திரம் இன்றி தற்போதைய காலப்பகுதியிலும் தமிழ் தேசிய பரப்பில் முன்நகர்த்தப்படுகின்ற அரசியலின்
ஆணிவேராகவும் இருக்கின்றது.
எனவே தமிழ்
தேசிய அரசியல் பரப்பிலும், அரசியல் தீர்வு விடயத்திலும் தவிர்க்க முடியாத சான்றாக பதியப்பட்டு
இருப்பது வட்டுக் கோட்டை தீர்மானமாகும் என்பது நம்மில் பலர்
அறிந்த விடயமாகும் .
2009 ஆம் ஆண்டு
முள்ளிவாய்க்காலின் முன்னர் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தீர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்களையும், சர்வதேச உடன்படிக்கைகளையும், பேச்சுவார்த்தைகளையும் , வட்டுக் கோட்டை தீர்மானம் உட்பட எல்லாவற்றையும் வலுவிழக்கச் செய்து
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை கேள்விக்குறியாக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியான அரசியல்
சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் அழிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய
அரசியலுக்கு எதிரானவர்களின் நிலைப்பாடாகும்.
இதற்கான சதிக் கோட்பாட்டு நகர்வுகளை விளங்கிக் கொண்டால் மேலும் தெளிவு
கிடைக்கும் ......
தொடர்ச்சியான
அரசியலின் முகமாக இருந்த TNA - தமிழ் தேசிய கூட்டமைப்பு சதிகாரர்கள் உள்நுழைக்கப்பட்டு படிப்படியாக உடைக்கப்பட்டு இறுதியாக தமிழ் தேசிய அரசியலின் அத்திவாரமாக இருக்கின்ற தமிழரசுக் கட்சியும் அழிக்கப்படும் நிலையில் முக்கிய உறுப்பினர்களின் வெளியேற்றத்தின் மத்தியில் நீதி மன்றத்தில் வாசல்களில்
தள்ளாடுகின்றது .இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய அரசியல் வெளியில் வலுவிழக்கும் என்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எவ்வாறான தாக்கம் ஏற்படும் என்றால் வட்டுக் கோட்டை தீர்மானம் உட்பட பின்னரான காலப்பகுதியில் மேற்கெள்ளப்பட்ட உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் என்பவற்றை பூச்சியத்தால் பெருக்கியது போன்றாகும்.
ஒரு
அரசியல் தொடர்ச்சி அற்றுப் போகும்.
இது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சியையும் சிதைக்க நினைப்பவர்களுக்கு நன்கு தெரியும். தெரிந்தே மக்கள் ஆதரவை குறைக்கும் வகையிலும் , தமிழ் தேசிய இனத்தின் அரசியலில் ஒரு அரசியல் படுகொலை மிகவும் நூதனமாக மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கின்றது.
இதை தடுத்து நிறுத்த வேண்டியது கட்சிகளைத் தாண்டி , கொள்கைகளைத் தாண்டி தமிழ் தேசிய பரப்பில் அரசியல் செய்கின்றவர்கள் அனைவரினதும் பொறுப்புமிகு கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
தமிழர்களின்
இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்போதோ ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன
....
1936 ஆம்
ஆண்டு தொடக்கம் 1939 ஆம் ஆண்டு வரை
உள்நாட்டு போரை எதிர்கொண்ட கற்றலோணியா (#Catalonia ) 2019 ஆம் ஆண்டு தான் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு பின்னர் அரசியல் தீர்வை முழு சுயநிர்ணயத்துடன் (தனிநாடு) பெற்றது.
எனவே
ஈழத் தமிழினம் ஒரு வரலாற்று அரசியல்
தொடர்ச்சி கொண்ட பேரியக்கத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் . எனவே
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உள்ள #இலங்கை_தமிழ்_அரசுக்_கட்சி எங்களை
தாண்டியும் அடுத்த
தலைமுறையிலும் தன் நிலையில் இருந்து
தடம் மாறாது தமிழ் தேசிய அரசியல் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதன் இடையே கட்சிக்குள்
உள்நுழைக்கப்பட்ட சதிகாரர்கள் யாராக இருப்பினும் அவர்களை எந்தவொரு பாராபட்சமும் இன்றி மக்கள் வெளியேற்ற வேண்டும்.
தமிழரசுக்
கட்சி பாதுகாக்கப்பட்டால்தான் தந்தை செல்வா பாதுகாக்கப்படுவார், அதன் தொடர்ச்சியாக வட்டுக்
கோட்டை தீர்மானம் உட்பட பின்னரான காலப்பகுதியில் மேற்கெள்ளப்பட்ட உடன்படிக்கைகள் ஒப்பந்தங்கள் எல்லாம் சான்றாக அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியும்.
அண்மையில் #தமிழ்_பொது_வேட்பாளர் விடயத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடு என்பது தமிழ் தேசிய அரசியல் வெளியில் இருந்து எவ்வளவு தடம் மாறி பயணிக்கின்றது
என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.
எனவே
அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களே! தமிழ் அரசுக் கட்சியில் பொருத்தமில்லாத நபர்களை வெளியேற்றி கட்சியின் தமிழ் தேசிய நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகும்.
தமிழ்
மக்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கான நீதி கிடைக்கும்வரைக்கும் தமிழ் தேசிய
பரப்பில் பெரும் பலத்தோடு தந்தை செல்வா அவர்களின்அரசியல் நிலைப்பாடு வலுவாக இருக்க வேண்டும். அது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சரி நம்பிக்கையும்
பயணமும் தடம்புரளாது இருக்க வேண்டும்.
தமிழ்
தேசிய அரசியல் பரப்பில் எத்தனை கட்சிகள், மற்றும் கூட்டணிகள் வந்தாலும் அது இடையறு நிலையில்
ஒரு தொடர்ச்சியற்ற அரசியலைத்தான் தமிழ் தேசிய பரப்பில் செய்ய முடியும். ( கண் கெட்ட பின்னர்
சூரிய வணக்கம் செய்வது போன்று)
நன்றி
திரு.ஜீவரெத்தினம் தவேஸ்வரன்.
Post a Comment