வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய வெற்றி பெற்ற வேட்பாளப் பெருந்தகைகளே!

 

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் தேசிய வாக்காளப் பெருமக்களே!அவர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற வேட்பாளப் பெருந்தகைகளே!

இந்த 2024 ஆம் ஆண்டுக்கான  இலங்கை பாராளுமன்ற தேர்தலில் இந்த சிவனடியான் தெரிவித்த கருத்துக்களை உள்வாங்கி,  நிரகரிக்க வேண்டியவர்களை பெரும்பாலும் நிராகரித்து,

ஆதரிக்க வேண்டியவர்களை பெரும்பாலும் ஆதரித்து,  உங்களின் சுயபுத்தியோடு வாக்களித்து, தமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும்,  எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு 

இந்த சிவனடியானின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி தமிழ் தேசிய எண்ணப்பாட்டை வெளிப்படுத்தி 

தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களால் அந்த மக்களின் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட,  தமிழரசு கட்சியின் வெற்றி வேட்பாளர்களான,


திருகோணமலை  மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட, சண்முகம் குகதாசன்,  


மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களான, ஞானமுத்து ஶ்ரீநேசன்,


இளையதம்பி சிறிநாத்


ராசமாணிக்கம் சாணக்கியன்


அம்பாறை  மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட, கவிந்திரன் கோடிஸ்வரன், 

வன்னித் தேர்தல் தொகுதியின் முல்லைதீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட


துரைராசா ரவிகரன்,  யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட

சிவஞானம் சிறிதரன், அத்தோடு,  

அதே யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து  தெரிவு செய்யப்பட்ட


கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 

மற்றும், 

ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் வன்னித் தேர்தல் தொகுதியில்  போட்டியிட்டு, மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவான


செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு,  சிவ ஆசிகளோடு  என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், கடந்த காலங்களில் தமிழ் தேசிய அரசியல் வாதிகளின் மீது கொண்ட வெறுப்பாலும், அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லாதது கண்டு   ஏற்பட்ட அவ நம்பிக்கையினாலும்,

வழமைக்கு, மாறாக  இலங்கையின் தேசியகட்சி ஒன்றுக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து அதன் நிதர்சனத்தை உணர்ந்து,  தமிழ் மக்களால் தமிழ் தேசிய உணர்வோடு தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய நீங்கள்  அனைவரும்,

தமிழ் தேசியம் சார்ந்த வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என்றாலும் கூட,

இனி வரும் காலங்களில் தமிழ் தேசிய கோட்பட்டோடு, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நன்மை கருதி, ஒற்றுமை உடன் பயணிக்க,

கெளரவ தமிழ் தேசிய  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உங்கள் அனைவரையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 


இதனை விட  சுயேட்சையாக ஊசி சின்னத்தில் போட்டியிட்டு தமிழ் மக்களின் வாக்குகளால் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெற்றி பெற்ற அர்ச்சுனா ராமநாதன் அவர்கள் தமிழ் தேசிய கோட்பாடுகளை தாங்கி பயணிக்கும் பட்சத்தில் அவரையும் அரவணைத்து பயணிக்க அனைத்து தமிழ் தேசிய கெளரவப் பாராளுமன்ற  உறுப்பினர்களாகிய உங்களிடம் வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

அத்தோடு,   தமிழர்களின் பூர்வீக பூமியான வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ் தேசிய பிரதி நிதித்துவத்தை இழந்து நிற்கும் வன்னி தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்திற்கு, தமிழரசு கட்சிக்கு கிடைக்க இருக்கும் தேசியப் பட்டியலை வழங்க அழுத்தம் கொடுக்க திருகோணமலை மாவட்ட  தமிழரசு கட்சி தலைவர் சண்முகம் குகதாசன் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி தலைவர் ராசமாணிக்கம் சாணக்கியன்  மற்றும்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசு கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கு, ஒரு தமிழ் தேசியவாதியாக எனது வேண்டுகோளை முன்வைத்து, இதுவே தமிழ் இனத்தின் ஒற்றுமைக்கு எடுத்து வைக்கும் முதல் அடியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு  இந்த தேசியப்பட்டியலில் இந்த தேர்தலில் நின்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு இடம் அளிக்காமலும் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் போன்றவர்களின் அல்லக்கைகளுக்கு சந்தர்ப்பம் வழங்காமலும்  இருப்பதே,

இனிவருங்காலங்களில் தமிழ் தேசிய சிதைவுகளை சீர் திருத்த உதவும் என்பதை தெரிவித்து, 

அந்த தேசியப் பட்டியலை, வவுனியா மாவட்டத்தின் தகுதி உள்ள பெண் ஒருவருக்கு வழங்குவதன் மூலம், தமிழ் தேசியப் பெண் பிரதிநிதி ஒருவரையும் நாடாளுமன்றம் அனுப்ப முடியும் என்பதை சுட்டிக்காட்டி,இதனை நூறு வீதம் முழு மனதுடன் பரிசீலனை செய்ய தமிழரசு கட்சியின் மத்திய குழுவினரை வேண்டிக் கொண்டு,  ஒன்று பட்டால் மட்டுமே ஈழத் தமிழ் மக்களுக்கு உண்டு வாழ்வு என்பதை தமிழ் தேசிய நிலைப்பாடு கொண்ட வடக்கு கிழக்கு மக்களுக்கும், அவர்களால் தெரிவு செய்யப்பட்ட கெளரவப் பாரளுமன்ற பிரதிநிதிகளுக்கும்  அழுத்தமாக பதிவு செய்கின்றேன்.

சுவாமி சங்கரானந்தா🙏

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post