மாற்றுத் திறனாளிகள் நாளில் நிரந்தர வைப்பில் முதலீடு!

 

பன்னாட்டு  மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி  03.12.2024அன்று கிளிநொச்சி விவேகானந்த நகரிலுள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் சிறப்பு நிகழ்வென்று நடைபெற்றது.

சங்கத்தின் தலைவி திருமதி யசோதா  ஸ்ரீகிருஷ்ணகுமார் தலைமையில  நடைபெற்ற இந்நிகழ்வை செயலாளர் ஞானகுமார் நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் முற்றாக விழிப்புலனை இழந்த மற்றும் செயல்படமுடியாத மாற்றுத் திறனாளிகள் 11 பேருக்கு இரண்டாம் கட்டமாக தலா 5 லட்சம் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டது.

இவ்வாறான 38 பேருக்கு தலா 15 லட்சம் ரூபா நிரந்தர வைப்பிலிடுவதே இலக்காக உள்ளது. உறவினர்களுக்கோ, அயலவர்களுக்கோ சிரமம் ஏற்படாத வகையில் நிரந்தர வருமானம் கிடைக்கும் நோக்குடன் இந்த நிரந்தர வைப்பு மேற்கொள்ளப்படுகிறது. நேற்றைய  நிகழ்வு மூலம்  இரண்டாம் கட்டம் நிறைவு பெறுகிறது.

இச்சங்கத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த  ஏழுபேர் உட்பட 278 பேர் பயனாளிகளாக உள்ளனர். 63 பேர் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுள்ளனர். உறவினர் தயவில்லாத 15 பேர் இங்குள்ள விடுதியில் தங்கியிருந்து வருகின்றனர். 172 மாணவர்கள் இந்நிறுவனத்தின் உதவியுடன் கல்வி கற்று வருகின்றனர். இப்பணிமனை அமைந்துள்ள வளாகத்தில் மெழுகுதிரி உருவாக்கம், கணனிப் பயிற்சிநெறி,  தேங்காயெண்ணைய் உற்பத்தி செய்தல் என்பன நடைபெறுகின்றன.

இந்நிகழ்வில் வங்கி மேலாளர், பிரான்ஸிலிருந்து வருகை தந்த சமூக செயற்பாட்டாளர் உட்பட பலரும் வைப்புப்பத்திரங்களை வழங்கினர். இறுதியாக நிகழ்ந்த உணவ உபசரிப்பு நிகழ்வை ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெறுப்பேற்றனர்


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post